கோவை வன உயிரியல் பூங்கா அதே இடத்தில் செயல்படவும், சிதிலமடைந்த சாலைகள் விரைவில் சரி செய்யப்பட வேண்டும்: சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோரிக்கை.!!

கோவை வன உயிரியல் பூங்கா தற்போது உள்ள அதே இடத்தில் செயல்படவும், சிதிலமடைந்த சாலைகள் விரைவில் சரி செய்யப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை வன உயிரியல் பூங்கா தற்போதுள்ள அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிட்டிசன் வாய்ஸ் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம். ஜெயராமன் கூறியதாவது:-



தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அருங்காட்சியகங்கள் புனரமைப்பு பணிக்கு 10-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வன உயிரியல் பூங்கா தற்பொழுது செயல்படாத நிலையில் உள்ளது.

இந்த வன உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வது வனவிலங்குகளை இங்கிருந்து சென்னைக்குக் கொண்டு செல்வது என்பது உள்ளிட்டவை அனைத்தையும் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோவை மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த செலவில் தங்களது குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாகத் திகழ்கிறது.

இந்த வன உயிரியல் பூங்காவை நகரின் வெளியே கொண்டு செல்வதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். பூங்கா செல்வதற்கு அதிக நேரம் மற்றும் நிதி சுமையை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அருங்காட்சியகங்கள் புனரமைக்கச் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளதைப் போல கோவை வன உயிரியல் பூங்கா தற்போது உள்ள அதே இடத்தில் செயல்படச் சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. கோவையில் சாலைப் பணிகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை எங்கள் அமைப்பு வரவேற்கிறது.

இருப்பினும் மக்களின் நலன் கருதிப் புனரமைப்பு பணிகளைத் தரத்துடனும், துரிதமாகவும் செயல்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...