இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.
கோவை: கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 3:30-மணிக்கு கோவை வந்தடைந்து மீண்டும் 4:30-மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவை -ஷார்ஜா இடையே கடந்த மார்ச் 18-ம் தேதி அதிகாலை இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.
ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களிலும் இதேபோல் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
பயணிகள் மற்றும் கார்கோ புக்கிங் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும்.
இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.