பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம்: கோவை மாவட்ட புதிய எஸ்.பி. வி.பத்ரிநாராயணன் பேட்டி…!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை துவங்க உள்ளோம். அதே போல, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வி.பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ்இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோரை சந்தித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் கூறியதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை துவங்க உள்ளோம். அதே போல, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

முக்கியமாக, இளைஞர்களைப் பாதிக்கக்கூடிய கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிகள் போன்ற பழைய நடைமுறைகள் சிறப்பாக இருந்தால், அதைத் தொடர உள்ளதாகவும், தேவைப்பட்டால் மாற்றம் செய்ய உள்ளதாக, எஸ். பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...