2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர், தனியார் ஆடிட்டர் கைது - சிபிஐ நடவடிக்கை

கோவையில் நில உரிமையாளரிடம், வருமான வரி செலுத்த, இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் தனியார் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.



கோவை: கோவையில் நில உரிமையாளரிடம், வருமான வரி செலுத்த, இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் தனியார் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாலதண்டபானி என்பவர் தனக்கு சொந்தமான ஆலாந்துறை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2013ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம், இவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, விவசாய நிலம் விற்ற பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும், என ஆய்விற்கு சென்ற கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார். 

மேலும், அவ்வாறு செலுத்தாமல் இருப்பதற்கு தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அவர் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், இரு தரப்பும் பேசி, இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக பாலதண்டபானி, சிபிஐ அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

இதையடுத்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்த பாலதண்டபானி, ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு காசோலையையும் டேனியலிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். 

மேலும், இடைத்தரகராக செயல்பட்ட ஆடிட்டர், ஸ்ரீதரன் என்பவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக சொன்னதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பிற்காக சேர்த்தனர். பரிசோதனையில், அவருக்கு உடல்நலக்குறைவு இல்லை என்பது உறுதியானதையடுத்து, டேனியல் மற்றும் ஸ்ரீதரனை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...