கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் திடீர் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் திடீர் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக, கோவை மாவட்டம் முழுவதும் இன்று மதியத்துக்கு மேல் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது.
அதன்படி, செட்டிபாளையம் பகுதியில் இன்று மதியம் பெய்த கனமழையுடன் பலத்த காற்று வீசியதால், பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் ஆயிரக்கணக்கில் சரிந்து சேதமாயின.
சுமார் 20 நிமிடம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தங்களது வாழை மரங்கள் சாய்ந்து பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.