கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவலர்கள் பணி நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வும், 2020ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. அந்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல், மருத்துவ காரணங்களால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 215 பேர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் போன நிலையில் விடுபட்டவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்.மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டிஐஜி முத்துசாமி தலைமையில் இந்த உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த உடற்தகுதி தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு, மார்பளவு சரிபார்த்தல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவை நடைபெறுகின்றன.