கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்றவர் கைது - 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது.


கோவை: கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்ற கண்ணன் என்பவர் கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவை காந்திமாநகர் பகுதியில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் பிக்கப் வேனை சோதனை செய்த போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...