வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்:'வேலைவாய்ப்பு முகாம்' 26-ந் தேதிக்கு மாற்றம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு..!

இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.



கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9-மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் மூலமாக தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 26-ந் தேதி காலை 9 மணியளவில் சூலூர் ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

இந்த முகாமில் உற்பத்தி, ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், வங்கி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இதில், 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில், சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்குத் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். பணி நியமனம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tbprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.

வேலைதேடும் இளைஞர்கள் முகாமை பயன்படுத்திப் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...