புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் காரமடை நகராட்சியின் வளர்ச்சிக்கு அது முக்கிய அங்கமாக இருக்கும் என நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவை: இந்தியா முழுவதும் ஏற்றுமதியாகும் காரமடை முறுக்கிற்கு அங்கீகாரம் அளிக்க காரமடை நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடையில் தரம் உயர்த்த நகராட்சியின் முதல் கூட்டத் தொடர் நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரமடை நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 14-தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவிற்குச் சுகாதாரம், கழிப்பறை, குடிநீர் வழங்க மட்டும் செலவீனங்களாக ரூ.23-லட்சம் கணக்கு காட்டப்பட்ட நிலையில் அது குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள்கடுமையான ஆட்சேபேணை தெரிவித்து அதிகாரிகளிடம் கணக்கு கேட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், கூட்டத்தில் பேசிய இரண்டாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் குருபிரசாத் காரமடையில் நெடுங்காலமாகப் பாரம்பரிய முறைப்படி கை முறுக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அதற்கான அங்கீகரித்த காரமடைபெறும் வகையில் காரமடை கை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானத்தைக்கொண்டு வரப்பட்டது.

அதற்கு மற்றவர்கள் இசைவு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காரமடை நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் காரமடை நகராட்சியின் வளர்ச்சிக்கு அது முக்கிய அங்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.