பொள்ளாச்சியில் பிஏபி பாசன சபை தேர்தலில் 114-மனுக்கள் ஏற்பு.!!

போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 27-ம் தேதி காலை 7-மணி முதல் 2-மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிஏபி பாசன சபை தேர்தலில் வேட்புமனு பரிசீலனை 123- மனுக்களில், 114-மனுக்கள் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தேர்தல் கடந்த 8-ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில், பிஏபி பாசன சங்க தலைவர் தேர்தலை நடத்தக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் 27-ம்நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

இதற்காக, கடந்த 16-ம் தேதி அன்று, ஆழியாறு பாசன சங்க தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனு பெறும் நிகழ்வு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 111-இடங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், 123-வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. இதில், 1-மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 8-மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகும், மீதமுள்ள 114-மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், போட்டியிடும் வேட்பாளர்களுக்குக் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், வரும் 27-ம் தேதி காலை 7-மணி முதல் 2-மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும், மாலை 4-மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...