பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற 77 வயது அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற 77 வயது அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற 77 வயது அரசு பள்ளி ஆசிரியர் எபினேசர் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியின் தந்தையும் சிறுவயது முதல் குடும்ப நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில், நேற்று காலை சிறுமியின் தந்தையும், தாயும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அங்கு சென்ற ஆசிரியர் எபினேசர் சிறுமியை மடியில் அமர வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்த பொழுது எபினேசர் சிறுமியிடம் தவறாக நடந்திருப்பது தெரியவந்தது.

சிறுமியின் பெற்றோர் எபினேசர் வீட்டுக்குச் சென்று கேட்டபொழுது முறையாக எபினேசர் பதிலளிக்காததால் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எபினேசர் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எபினேசர் சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது உறுதியானது.

பின்னர், போலீசார் எபினேசர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...