மண்‌ வளம்‌ காக்க 100 நாள்‌ பைக்‌ பயணத்தை லண்டனில்‌ இருந்து தொடங்கிய சத்குரு..!

மண்‌ வளத்தை பாதுகாக்க சட்டங்கள்‌ இயற்றவும்‌, விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ 3 கண்டங்களில்‌ 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ பயணம் மேற்கொள்ள திட்டம்.


கோவை: உலக அளவில்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க சட்டங்கள்‌ இயற்றவும்‌, அதுகுறித்து மக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌ 100 நாள்‌ மோட்டார்‌ சைக்கிள்‌ பயணத்தை சத்குரு இன்று (மார்ச்‌ 21) லண்டனில்‌ இருந்து தொடங்கினார்.



வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர்‌ சதுக்கத்தில்‌ 7 வயது சிறுமி கொடி அசைத்து இப்பயணத்தை தொடங்கி வைத்தார்‌.



இதையொட்டி, அங்கு ஏராளமான மக்கள்‌ இரண்டு சவால்கள்‌ நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும்‌ சத்குருவுக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர்‌. முன்னதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ பங்கேற்ற நிகழ்ச்சியில்‌ சத்குரு உரை நிகழ்த்தினார்‌. மேலும்‌, மற்றொரு பொதுக்‌ கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்‌.



லண்டனில்‌ இருந்து புறப்பட்ட சத்குரு இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும்‌ மத்திய கிழக்கு நாடுகள்‌ வழியாக 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார்‌ சைக்கிளில்‌ 3 கண்டங்களில்‌ 27 நாடுகளுக்கு பயணித்து இந்தியா திரும்ப உள்ளார்‌. இப்பயணத்தில்‌ அவர்‌ பல்வேறு நாடுகளின்‌ தலைவர்கள்‌, இசை கலைஞர்கள்‌, விளையாட்டு வீரர்கள்‌, சுற்றுச்சூழல்‌ வல்லுனர்கள்‌ என பல தரப்பட்ட பிரபலங்களுடன்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்து கலந்துரையாட உள்ளார்‌. மேலும்‌, அந்தந்த நாடுகளில்‌ முன்னணி ஊடகங்களுக்கு பேட்டியும்‌ கொடுக்க உள்ளார்‌.

இது தவிர, மே மாதம்‌ ஐவெரி கோஸ்ட்‌ நாட்டில் ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பு (UNCCD) நடத்தும்‌ COP 15 என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ மாநாட்டில்‌ உரை நிகழ்த்த உள்ளார்‌. இதில் 170க்கும்‌ மேற்பட்ட நாடுகளின்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொள்ள இருக்கின்றனர்‌. மேலும்‌, டாவோஸில்‌ நடக்கும்‌ உலக பொருளாதார மாநாட்டிலும்‌ சத்குரு கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்‌.

சத்குரு தொடங்கியுள்ள மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ மூலம்‌ உலகம்‌ முழுவதும்‌ சுமார்‌ 350 கோடி மக்களிடம்‌ மண்‌ வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்‌ 6 கரீபியன்‌ நாடுகள்‌ தங்கள்‌ நாடுகளில்‌ மண்‌ வளத்தை மேம்படுத்த மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின்‌ (UNCCD) ஆய்வின்‌ படி, தற்போது உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்‌, 2050ம்‌ ஆண்டிற்குள்‌ உலகில்‌ உள்ள 90 சதவீதம்‌ மண்‌, அதன்‌ வளத்தை இழந்து விடும்‌ அபாயம்‌ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்‌, உலகளவில்‌ உணவு மற்றும்‌ தண்ணீர்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சம்‌ மற்றும்‌ பட்டினிச்‌ சாவுகள்‌ ஏற்படும்‌ எனவும்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...