இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே காரச்சேரியில் மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள ஒத்தகால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34) லாரி டிரைவரான இவரும், மாணவி நளினியுடன் கடந்த 6 மாதமாக கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி பகுதியில் உள்ள தனியார்கல்குவாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வேலைக்குச் சென்ற ராஜ்குமார் தான் ஓட்டி வந்த டிப்பர் லாரியை வாட்டர் சர்வீஸ் செய்வதற்குத் தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு குழாயைக் கையில் பிடிக்கும் போது திடீரென அதன் எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் ராஜ்குமாரை உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் மேலாளர் சரண்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.