மகாத்மா காந்தி நற்பணி மன்ற இயக்கத்தினர் சார்பாக, வெள்ளகோவில் பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருப்பூர்: சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சுமார் 2 ஆயிரம் நபர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மகாத்மா காந்தி நற்பணி மன்ற இயக்கத்தினர் சார்பில் 3 வது வருடமாக இன்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா வெள்ளகோவில் பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.சிறுவர் வரை பெரியோர் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும்மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினர்.

சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி ஆகியவற்றின் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறார்கள் உட்பட700 பெண்கள், 1300 ஆண்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியானது 4 கிலோமீட்டர்,5 கிலோமீட்டர்,8 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்கள் மற்றும்ஒவ்வொரு பிரிவின் கீழ் வெற்றி பெறும் முதல் 5 நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.