திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..!

மகாத்மா காந்தி நற்பணி மன்ற இயக்கத்தினர் சார்பாக,  வெள்ளகோவில் பகுதியில் சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சுமார் 2 ஆயிரம் நபர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 



மகாத்மா காந்தி நற்பணி மன்ற இயக்கத்தினர் சார்பில் 3 வது வருடமாக இன்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா வெள்ளகோவில் பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.சிறுவர் வரை பெரியோர் வரை சுமார் 2 ஆயிரத்திற்கும்மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினர்.



சாலை பாதுகாப்பு மற்றும் நெகிழி மறுசுழற்சி ஆகியவற்றின் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறார்கள் உட்பட700 பெண்கள், 1300 ஆண்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியானது 4 கிலோமீட்டர்,5 கிலோமீட்டர்,8 கிலோ மீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ்கள் மற்றும்ஒவ்வொரு பிரிவின் கீழ் வெற்றி பெறும் முதல் 5 நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...