போக்ஸோ குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் - கோவையில் ஐ.ஜி. சுதாகர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக நடைபெற்ற ஒரு நாள் பயிலரங்கத்தை, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை பணியிடை பயிற்சி மையம் சார்பாக, கோவை காவல் சரகத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாநகரங்களை சார்ந்த அனைத்து பெண் காவல் அதிகாரிகளுக்கு,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக ஒரு நாள் பயிலரங்கம், கோவை நீலாம்பூர் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 



இந்த பயிலரங்கத்தை, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், துவக்கி வைத்தார். இதையடுத்து, கடந்த ஓராண்டில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக கையாண்டு, அதிகப்படியான வழக்குகளில் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களுக்கும், கேடயங்களை பரிசாக வழங்கினார். 

அதேபோன்று, மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எதிரிகளை குண்டர் தடுப்புக் காவலில் வைத்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். 



இப்பயிலரங்கத்தில் நீதித்துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பணியிடை பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரியான, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மேற்பார்வையில் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில், உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளும், கோவை சரகத்திற்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில், பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் போக்ஸோ வழக்குகளை சிறப்பாக கையாண்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும், சமீப காலமாக அதிகளவு போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யபடுவதாக கூறிய அவர், புறநகர் பகுதிகளிங் போக்ஸோ வழக்குகள் குறித்து விழிப்புணர்வை அதிகபடுத்த வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...