தக்காளி மற்றும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைத் தரையில் கொட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தக்காளி மற்றும் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து சமுதாய நலக்கூடம் மூலமாக விற்பனை செய்யத் தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தைத் தரையில் கொட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சின்ன வெங்காயத்திற்குக் கிலோவுக்கு 30-ரூபாயும், தக்காளி கிலோவுக்கு 15-க்கும் விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்கக் கோரியும், தக்காளி மற்றும் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து சமுதாய நலக்கூடம் மூலமாக விற்பனை செய்யத் தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளி மற்றும் சின்னவெங்காயத்தைத் தரையில் கொட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் விவசாயிகள் வாழ்வாதாரம் கீழே சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதேயாகும். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சின்ன வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு மட்டுமேதான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறைந்த பட்சம் கிலோவுக்கு 30 ரூபாய் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கும். அதே போன்ற தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது குறைந்த பட்சம் கிலோ 15 ரூபாய் இருந்தால் மட்டுமே கட்டுப்படியான விலை கிடைக்கும். இந்த விலை வீழ்ச்சியால் கடன் வாங்கிய விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஒன்றிய பிரதமர் அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாகச் சேர்த்துக் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் கூறியிருந்தார். ஆனால் அவருடைய ஆட்சிக்காலத்தில் இதுவரை அவ்வாறு நடக்கவில்லை.



எனவே உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக உயர்த்தி குறைந்தபட்ச விலை நிர்ணயம் உற்பத்தி பொருட்களுக்குச் செய்ய வேண்டும், தமிழக அரசும் உடனடியாக சின்ன வெங்காயம் தக்காளியைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகக் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைத் தரையில் கொட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...