இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு 1000-மரக்கன்று பரிசாக வழங்கிய நீலகிரி ஆட்சியர்..!

தனக்குச் சிறப்பான முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, நீலகிரி ஆட்சியர் பாராட்டி உள்ளார்.


கோவை: தனக்குச் சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்தமைக்காக, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு ஆயிரம் மரக்கன்று பரிசாக வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் அம்ரித். இரண்டு மாதங்களுக்கு முன் அம்ரித், அவரது மனைவி மற்றும் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

உயர் சிகிச்சைக்காகக் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்றனர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்தமைக்காக, ஆயிரம் 'பசுமை மாறா மரக்கன்று' வழங்கி, பாராட்டி உள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கண்காணிப்பாளர் ரவிக்குமார், உதவி கண்காணிப்பாளர் தமிழ் செல்வன், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

பின்னர், 17-துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்குப் பொறுப்பேற்று, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...