கோவையில் இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம்: நிலத்தை அபகரித்த 4-பேருக்கு போலீசார் வலைவீச்சு.!

சூலூர் அடுத்த பட்டணம் காவேரி நகரில் இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, 50-லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்த நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: இறந்தவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, 50-லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரிக்க முயற்சித்த நான்கு பேரை, கோவை போலீசார் தேடி வருகின்றனர்.

சூலூர் அடுத்த பட்டணம் காவேரி நகரில் சரஸ்வதி, மனோரஞ்சிதம் என்ற இரு சகோதரிகளுக்குச் சொந்தமான 10-சென்ட் நிலம் உள்ளது.

இதன் மதிப்பு 50-லட்சம் ரூபாய். இந்த நிலம், இவரது தந்தை அய்யாசாமி 2007-ம் ஆண்டு இறந்து போனதற்குப் பிறகு சகோதரிகள் வசம் வந்தது. இந்த நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல், அய்யாசாமி இறந்து போனதை மறைத்து, போலி பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்தது.

அதன்படி, அய்யாசாமி என்ற பெயரில் போலியான நபரை சிங்காநல்லூர் சார் பதிவாளர் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி, மார்ச் 11-ல் விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்திருப்பதாக அறிந்த சார் பதிவாளர், பத்திர வினியோகத்தை நிறுத்தி வைத்தார்.

நிலத்தின் சட்ட பூர்வ வாரிசு தாரர்களான சரஸ்வதி, மனோரஞ்சிதம் ஆகியோர், தங்கள் தந்தை அய்யாசாமி 2007-ம் ஆண்டு இறந்து விட்டதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தனர். அதிர்ச்சியடைந்த சார் பதிவாளர், மோசடி செய்து நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்ட போலியான நபர், நிலத்தை வாங்கிய ஈரோட்டைச் சேர்ந்த அருள் ராஜ், சாட்சி கையெழுத்துப் போட்ட அவிநாசி வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மதுரை நாகமலையை சேர்ந்த ஜோசப் ஜெயசீலன் ஆகிய நால்வர் மீது, கோவை எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.

விசாரணை நடத்திய கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனப்பிரியா, நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்தார். இந்த நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...