'அவசர உதவி அழைப்புக்கு உடனே தீர்வு'- முதலிடம் பிடித்த கோவை மாநகரம் காவல் துறை..!

கோவை மாநகரக்‌ காவல்துறையினர்‌ மாநில அளவில்‌ அவசர உதவி கோரும்‌ அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில்‌ தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும்‌ முதலிடம்‌ பெற்றுள்ளனர்‌.

கோவை: அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடம் பெற்றுள்ளனர்.

கோவை மாநகரக்‌ காவல்துறையினர்‌ மாநில அளவில்‌ அவசர உதவி கோரும்‌ அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில்‌ தொடர்ந்து பிப்ரவரி-2022 மாதத்திலும்‌ முதலிடம்‌ பெற்றுள்ளனர்‌.

சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள்‌ நடக்கும்‌ போது அவசர போலீஸ்‌ உதவியை நாடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்‌.100ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள்‌ தகவல்‌ தெரிவிக்கும்‌ சம்பவ இடத்திற்கு, கோவை மாநகர காவல்துறையினர்‌ 2.38 நிமிடங்களிலும்‌ அதனைத்‌ தொடர்ந்து சென்னை காவல்துறையினர்‌ 2.54 நிமிடங்களிலும்‌ மற்றும்‌ கரூர்‌ காவல்துறையினர்‌ 3.05 நிமிடங்களிலும்‌ விரைந்து செல்வதாக காவல்துறை கூடுதல்‌ இயக்குநர்‌ (ERSS/SPMCR Projects) அறிக்கை அனுப்பியுள்ளார்‌.

கோவை மாநகரக்‌ காவல்துறை ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌‌ மாநகர காவல்துறையினரைப் பாராட்டி, வரும்‌ காலங்களிலும்‌ பொதுமக்களுக்குச் சேவை புரிந்து தொடர்ந்து முதலிடம்‌ பெற வாழ்த்து தெரிவித்தார்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...