நோய் தொற்றால் யானை உயிரிழந்திருக்கலாம் என்பதால் பிபிஇ கிட் உடையணிந்து மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில், சலீம் அலி பறவைகள் சரணாலையம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக உயிரிழந்த யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம் என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், யானைக்கு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.

நோய் தொற்றால் யானை உயிரிழந்திருக்கலாம் என்பதால் பிபிஇ கிட் உடையணிந்து மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சேகரிப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வக முடிவுகள் வந்த பின்னரே, யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.