கோவை ஆர்.எஸ். புரம் அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

இதுகுறித்து ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் அருகே லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர் சிங்கப்பூரில் பட்டமேற்படிப்பு படித்தவர். இவர் தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் மூலமாக அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தரமுடியும் என்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதை நம்பி பலர் ஆதித்தனை நாடியுள்ளனர். ஆதித்யன் லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்கும், பிரிட்டன் விசா வாங்குவதற்கும் பணம் செலவாகும் என்று கூறி ஒரு பெரிய தொகையை வசூல் செய்தார். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும் ஆசையில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும், இரு ஐடி ஊழியர்கள் கார்த்திக் மற்றும் பிரபாகரன் என்ற இருவரிடம் 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி உள்ளார். பணம் கொடுத்த எவருக்கும் ஆதித்யன் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.

இதனையடுத்து, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை மிரட்டவும் தொடங்கியுள்ளார்.

இதனா‌ல், அதிர்ச்சி அடைந்த கார்த்திக் மற்றும் பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், ஆதித்தியனை ஆர்.எஸ். புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...