இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சிகிச்சைக்காகக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (58). இவர் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் விடும் பணிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் பாரதி நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பாலக்காடு சர்வீஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் வலது புறத்திலிருந்த இருசக்கர வாகன ஒர்க்ஷாப்க்கு செல்ல திரும்பியதாகத் தெரிகிறது.
அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், பாரதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் பாரதி தலையில் பலத்த காயத்துடன் இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.