'கரண்ட் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம்'- நரிக்குறவர் இன மக்கள் மின் இணைப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

துடியலூரை அடுத்த புது முத்துநகர் பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இனமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: நரிக்குறவர் இன மக்கள் தங்களது இடத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த புது முத்துநகர் பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இனமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், கோவை துடியலூர் அடுத்த புது முத்துநகர், பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வசிக்கும் காலனி உள்ளது.

இங்கு சுமார், 65 குடும்பங்கள், சுமார் 40 ஆண்டுகளாக, வசித்து வருகின்றனர் என்றும் இவர்கள், அந்த பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில் இவர்களது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி, வருகின்றனர்.

ஆனால் இவர்களின் இடம், புறம்போக்கு இடம் என்பதால், அப்பகுதியில் வசிக்கும், நீலவேணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கில் வெற்றி பெற்று அவரது வீட்டுக்கு மட்டும் மின் இனைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 64 வீடுகளுக்கு மின் இனைப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக அப்பகுதியில் வசிக்கக் கூடிய நரிக்குறவர் இன மக்களுக்கு மின் இணைப்பு வழங்க ஆணவம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...