35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 62 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் 62 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி போலீசாருக்கு காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இரத்தினபுரி போலீசார் உதவி-ஆய்வாளர் செங்கோல்நாதன் தலைமையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு இரண்டு பேர் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை நடத்திய போது மூட்டைக்குள் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை காவல் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் வெங்கடேஷ் (50) மற்றும் அவரது மகன் வசந்தராஜா (20) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 62 கிலோ குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.