கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் - பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம்..!

மேலும், வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள யாகசாலை பூஜை, கொடியிறக்கும் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுக்கு வரும் என கோயில் நிர்வாகிகள் தகவல்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

நேற்று முன்தினம் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளையானை சேவை நடந்தது. ஏழாம் நாளான நேற்று, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடந்தது.



தேர்த்திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

அப்போது, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பின்னர், மாலை 4 மணிக்கு தேர்நிலைத் திடலில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர்.

தேர்நிலைத் திடலிலிருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள திடலுக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பட்டீஸ்வரரை போற்றி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், வரும் 18ம் தேதி, நடைபெறவுள்ள யாகசாலை பூஜையுடன், கொடியிறக்கும் நிகழ்ச்சியானது நடைபெறும் எனவும், அத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுக்கு வரும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...