சின்னதடாகத்தில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வழங்கினார்‌.


கோவை: சின்னதடாகத்தில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ விளையாட்டு உட்கட்டமைப்புக்குத் தேவையான உபகரணங்கள்‌, பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும்‌ தேவையான வசதிகளை எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ என்ற நிறுவனத்தின்‌ CRS நிதிமூலமாக மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ லதா சுந்தரம்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ வழங்கினார்‌.

அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ ஆதரவுடன்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, சின்னதடாகத்தில்‌ உள்ள அரசு பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்து விளையாட்டு உட்கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள்‌, பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும்‌ தேவையான வசதிகளை எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ என்ற நிறுவனத்தின்‌ CSR நிதிமூலமாக அமைத்துக்‌ கொடுக்கும்‌ செயல்‌ திட்டம்‌ தீட்டப்பட்டுள்ளது.

இதன்‌ மூலம்‌ 12 கிராமங்களைச்‌ சேர்ந்த 520 மாணவியர்களுக்கு விளையாட்டு வசதிகள்‌ அளிக்கப்படும்‌ உடல்‌ ஆரோக்கியம்‌, மன ஆரோக்கியம்‌ மற்றும்‌ மறைந்திருக்கும்‌ திறமைகளை வெளி கொணர்வது பல்வேறு போட்டிகளில்‌ பங்கு கொள்வது அதன்‌ மூலம்‌ வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுடன்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தபடும்‌. இந்த ஆண்டு ஒரு கைப்பந்து மைதானம்‌, கூடைபந்து மைதானம்‌, கபடி ஆடுகளம்‌ மற்றும்‌ செயல்பாடுகளுக்கான அரங்கம்‌ ஆகியவை உருவாக்கப்படும்‌. வரும்‌ ஆண்டு ஜுன்‌ மாதம்‌ முதல்‌ பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்‌.

இந்த வசதிகள்‌ அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள்‌ பயன்படுத்த ஏதுவாக அமையும்‌. மேலும்‌ வருங்காலத்தில்‌ இவ்வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌ வகையில்‌ அமைக்கப்படும்‌. இதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ கீதா மற்றும்‌ அறம்‌ பவுண்டேஷன்‌ சாரிடபிள்‌ டிரஸ்ட்‌ அறங்காவலர்‌ லதா சுந்தரம்‌ கையெழுத்திட்டு அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்களிடம்‌ வழங்கினார்‌. உடன்‌ எக்ஸ்பிலியோ சொல்யூஷ்ன்ஸ்‌ லிமிடெட்‌ கோவை மையத்தலைவர்‌ ஸ்ரீ ராம்‌ உடனிருந்தார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...