வால்பாறை நகராட்சி தலைவராக அழகு சுந்தரவள்ளி பொறுப்பேற்றார்

14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 21-க்கு 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தலைவர் பொறுப்பேற்றார்.


கோவை: வால்பாறை நகர மன்ற தலைவராக 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி பதவியேற்றார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 20-திமுகவினரும் 1-அதிமுகவினர் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நகர் தலைவர் பதவிக்கு திமுக கட்சித் தலைமை 10-வது வார்டு உறுப்பினர் காமாட்சி என்பவரை வேட்பாளராக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தவரை எதிர்த்து திமுக கட்சியைச் சேர்ந்த 14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி என்பவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் இறுதி வெற்றி அறிவிப்பு முன்னதாக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு, தலைமை அறிவிக்காத வேட்பாளருக்கு இரு தரப்பும் ஆதரவாளர்களுக்கு இடையே, சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாகத் தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் திடீர் நகர உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் 6- நகர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



14-வது வார்டு உறுப்பினர் அழகு சுந்தர வள்ளி நகர மன்ற தலைவர் தேர்தலில் 12-வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தலைவர் தேர்தலில் அழகு சுந்தரவள்ளி 12-வாக்குகள் பெற்றார். தலைமை அறிவித்த காமாட்சி 9-வாக்குகள் பெற்றார். வெற்றியை அறிவிக்கும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையைச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெற்றியை அறிவிக்கமுடியாமல் தேர்தல் மறு தேதியில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாக ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் அழகுசுந்தரவள்ளி தலைவர் பொறுப்பேற்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...