இளம் பெண்ணான இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பகுதி மக்களுக்கு என்ன செய்திட முடியும் என்று தேர்தலுக்கு முன்பாக பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை மாநகராட்சி 82வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபஷீரா மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்து பள்ளிக்ககுழந்தைகள் சாலை கடக்க உதவி செய்தார்.
கோவை மாநகராட்சி மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலினை சரிசெய்து பாத்திமா பள்ளியில் பயிலும் பள்ளிக்ககுழந்தைகள் வாகன நெரிசல் அதிகமுள்ள சாலையினை கடக்க 82வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் முபசீரா அவர்கள் போக்குவரத்தை சரி செய்ய உதவி செய்தார்.
இளம் பெண்ணான இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பகுதி மக்களுக்கு என்ன செய்திட முடியும் என்று தேர்தலுக்கு முன்பாக பரவலாக பேசப்பட்டது.
ஆனால், இன்று இவர் வெற்றி பெற்ற பிறகு தினமும் அவருடைய பகுதியில் தினந்தோறும் ஆய்வுப்பணிகள் மேற்பார்வையிட்டு வருகிறார். தொடர்ந்து பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறார்.
82வது வார்டு மாமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படுகிறது. மேலும் இவரது இன்றைய செயலானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.