நீலகிரி பந்தலூரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல ஏக்கர் நிலப்பரப்பு பாதிப்பு..!

பந்தலூர் - கோழிக்கோடு சாலையோர வனத்தில் திடீரென பரவிய தீயை வனத் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.


நீலகிரி: நீலகிரி பந்தலூரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயால், பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. நீலகிரி மாவட்டம், பந்தலூர், கூடலூர் வனப் பகுதிகள் வறட்சியில் சிக்கி உள்ளன. மரம் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வனத்துக்கு தீ வைக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பந்தலூர் - கோழிக்கோடு சாலையோர வனத்தில் திடீரென தீ பரவியது. வனத் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து, நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கூடலூர் ஆமைக்குளம், அரசு கலைக் கல்லூரி வளாகத்தை ஒட்டிய வனப் பகுதியிலும் நேற்று காலை காட்டு தீ ஏற்பட்டது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில்,

'தீயால், பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து, உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீ வைக்கும் மர்ம நபர்கள் குறித்து, மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ, 500 ஏக்கருக்கு மேல் பரவியது. கடந்த இரண்டு நாட்களாகக் கள பணியாளர்கள், தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதுவரை மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. நேற்று ஒரே நாளில் 114 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில், 52 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதால், மலை சார்ந்த வனப் பகுதிகளில் சுற்றுலா பயணியரை அனுமதிப்பதை உள்ளூர் அளவில் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...