Rapido இருசக்கர டாக்ஸியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை; ரத்து செய்ய கோரி கோவை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை.

இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வரும் ராப்பிடோ டாக்ஸிகளால், ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.


கோவை: ராப்பிடோ (Rapido) என்ற தனியார் இரு சக்கர வாகன டாக்ஸி தற்போது பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வகை டாக்ஸியால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அந்த டாக்ஸி சேவையை உடனடியாக ரத்து செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், "பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு டி-போர்டு பதிவு இருக்க வேண்டும். ஆனால், அந்த இரு சக்கர டாக்ஸி வாகனங்கள் ஓன்- போர்டு பதிவுகளாக உள்ளது. மேலும்,பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுகிறது.

மேலும், ஓன்-போர்டு வாகனங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் செய்வதில் அதிக சிக்கல்கள் உள்ளது", என்றனர்.

அதே சமயம் இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர்மேலும் இந்த இரு சக்கர டாக்ஸிகளால் ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த இருசக்கர டாக்ஸியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனர்.

மனு அளிக்க வந்த ஆய்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...