60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாள், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சூலூர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (83). பழனிச்சாமி இறந்ததால், வள்ளியம்மாள் தனது மகன் ராஜேந்திரன் வீட்டிலேயே தனியான அறையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் வள்ளியம்மாள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, அவரது சேலையில் தீடீரென தீப்பிடித்து உடல் முழுவதும் எரியத் துவங்கியது. இதையடுத்து, வள்ளியம்மாள் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாள், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.