கோவை - பொள்ளாச்சி நவமலை அருகே அரசு பேருந்து மற்றும் கார்களை வழி மறித்த ஒற்றை ஆண் காட்டு யானை; மின்வாரிய ஊழியர் காயம்.

நேற்று மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்து  தாக்கியது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அருகே நவமலை வனப்பகுதியில், மின் வாரியத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில்,நேற்று வழக்கம்போல் மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, நவமலை அருகே சென்றபோது போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்துதாக்கியது.ஒரு கார் முன்னோக்கி வந்த நிலையில், சரவணன் என்பவர் வந்த மற்றொரு காரை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

இதையடுத்து, காரை தொடர்ந்து புரட்டிப் போட முயன்றுள்ளது. அதேபோல், மற்றொரு காரையும் துரத்திச் சென்ற ஒற்றை காட்டு யானை அந்தக் காரையும் தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்து, கார்களை தாக்கிக் கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 



இதையடுத்து காரில் காயங்களுடன் இருந்தமின்வாரிய ஊழியர் சரவணன் (49) என்பவரை மீட்டு ஆழியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல், அங்கு வந்த அரசு பேருந்தையும் ஒற்றை காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...