கோவையில் பெண்ணிடம்  செயினை பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த கணவன் - மகள்..!  போலீசார் பாராட்டு.

மத்திய அரசு இல்லாத மாநிலங்களில், சிறு சிறு விஷயங்கள் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பதுதான் எனது கருத்து, என்று தெரிவித்தார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரதுமனைவி லீலாவதி. நேற்று அதே பகுதியில் உள்ள கடைக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் லீலாவதியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்க செயினை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.

அப்போது, லீலாவதி சத்தம் போடவே அருகில் இருந்த அவரது கணவர் மற்றும் மகள் இருவரும் திருடனின் இருசக்கர வாகனத்தைஇழுத்து கீழே தள்ளி விட்டனர். இதில், தடுமாறி கீழே விழுந்த திருடன் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்று பதுங்கி கொண்டான். அங்கு கூடிய பொது மக்கள் திருடனை பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பிடிபட்ட நபரிடமிருந்து11 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க செயினை மீட்ட போலீசார் வழிப்பறி கொள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையன் வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பக்கிரிசாமி என்பதும் துடியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. 

பிடிபட்ட நபர், வேறு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளவரா? என்ற போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெண்ணின் செயினை பறித்து விட்டு தப்ப முயன்ற திருடனை தைரியமாக மடக்கி பிடித்த மகள் மற்றும் கணவனை துடியலூர் போலீஸார் பாராட்டினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...