ஊட்டி மஞ்சூர் அருகே டீ கடை கதவை உடைத்து கடையை சூறையாடிய கரடி - வனத்துறையினர் கண்காணிப்பு..!

பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளையில் உணவு தேடி குடியிருப்புக்கள் உலா வருவதாக பொதுமக்கள் புகார்.


நீலகிரி: ஊட்டி மஞ்சூர் அருகே டீ கடை கதவை உடைத்து கடையை சூறையாடிய கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பகல் நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளையில் உணவு தேடி குடியிருப்புக்கள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடியது. மேலும், அடுப்பையும் உடைத்துத் தள்ளி விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...