ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

மாநில அரசுக்கு ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற 5-மாநில தேர்தலில் பாஜக 4-மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிப்போம் என பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலை விடச் சரிவையே கண்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளோடு ஒருங்கிணையவில்லை. மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல் என தெரிவித்தார்.



மதச் சார்பற்ற கட்சிகள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும், இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது. ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்.

மாநில அரசுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாஜக ஆணவக் கொலைகளுக்குத் துணை நிற்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...