கோவைப்புதூரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு; ஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை.

கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சுகுணா (80) காலையில் தனது வீட்டு வாசலில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து வந்த இருவர் அவரது 7 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பித்தனர்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (80). இவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுகுணாவின் அருகே முகவரி கேட்பது போல் அருகே சென்றுள்ளனர். சுகுணா திரும்பி முகவரி சொல்ல முயன்ற போது திடீரென இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்தப்பிச் சென்றனர்.

மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ஹெல்மட் அணிந்த திருடர்களை பிடிக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம், தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...