அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்தத்தை தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
கோவை: அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் அனைத்துத் தொழிற்சங்கங்களின் மண்டல மாநாடு நாளை (13.03.2022)ம் நாள் ஞாயிறு காலை 11 மணிக்கு காட்டூர் AITUC அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் மாநில தொழிற்சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளை விளக்கியும், வேலை நிறுத்தம் தொடர்பான இயக்கங்கள், போராட்டங்கள் குறித்தும் முடிவுகள் மேற்கொள்ளவுள்ளனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, சட்டத் தொகுப்புகள் 4ம் திரும்பப்பெற வலியுறுத்தியும், மின்சாரத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் கொள்கைகளுக்கு எதிராகவும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ள இம்மண்டல மாநாட்டில் போராட்ட அறிவிப்புகள் குறித்த முடிவுகளும் மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.