கோவையில் வரும் மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்..!

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்தத்தை தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார்.


கோவை: அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மார்ச்‌ 28, 29 ஆகிய தேதிகளில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவை, திருப்பூர்‌, நீலகிரி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களின்‌ அனைத்துத் தொழிற்சங்கங்களின்‌ மண்டல மாநாடு நாளை (13.03.2022)ம்‌ நாள்‌ ஞாயிறு காலை 11 மணிக்கு காட்டூர்‌ AITUC அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில்‌ மாநில தொழிற்சங்கத்‌ தலைவர்கள்‌ கோரிக்கைகளை விளக்கியும்‌, வேலை நிறுத்தம் தொடர்பான இயக்கங்கள்‌, போராட்டங்கள்‌ குறித்தும்‌ முடிவுகள்‌ மேற்கொள்ளவுள்ளனர்‌.

மத்திய அரசின்‌ தொழிலாளர்‌ விரோத, சட்டத்‌ தொகுப்புகள்‌ 4ம்‌ திரும்பப்‌பெற வலியுறுத்தியும்‌, மின்சாரத்‌ திருத்தச்‌ சட்டத்தை இரத்து செய்யக்‌ கோரியும்‌, விவசாயிகளின்‌ கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்‌, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும்‌ கொள்கைகளுக்கு எதிராகவும்‌ உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ள இம்மண்டல மாநாட்டில்‌ போராட்ட அறிவிப்புகள்‌ குறித்த முடிவுகளும்‌ மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...