சேரன் மாநகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் சாக்கடை கால்வாய் பிரச்சனை: மாணவரணி துணை அமைப்பாளருடன் கவுன்சிலர் ஆய்வு

திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: சேரன் மாநகரில் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை மாணவரணி துணை அமைப்பாளருடன் கவுன்சிலர் ஆய்வு செய்தார்.

விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. ஏ,பி,சி என மூன்று பிரிவுகளில் 568 வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.



சாக்கடை கால்வாய் கட்டமைப்பு வசதி கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் சரி செய்யப்படாத காரணத்தால் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளன.



இப்பிரச்சனை குறித்து திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று சேரன்மாநகர் குடியிருப்பு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:-

சேரன் மாநகரில் மொத்தம் 568 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டமைப்பு சீரான முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்கப்படாத காரணத்தால் குடியிருப்புப் பகுதி வளாகம் முழுவதும் கழிவுநீர் சாக்கடையில் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன் குளம்போல் தேங்கி நிற்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்த போதும் இன்றுவரை சேரன்மாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

25-ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக தற்பொழுது திமுக இப்பகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை சேரன்மாநகர் 4-வது பஸ் ஸ்டாப் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கழிவுநீர் சாக்கடை கால்வாயின் அவல நிலை குறித்து நான் மற்றும் கவுன்சிலர் பாபு இருவரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டோம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்". இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாநகராட்சி 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு கூறியதாவது:-



எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மோசமான ரோடு, சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சினை அதிகம் காணப்படுகிறது. திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை இப்பகுதி மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

அவர்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது. மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



சேரன் மாநகரில் இன்று சாக்கடை கால்வாய் பிரச்சனை குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...