பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோவில் 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது..!

பொருட்களைப் பறிமுதல் செய்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு கடத்த முற்பட்டது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பாலக்காடு சாலையில் சரக்கு ஆட்டோவில் 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில் எஸ்பியின் தனிப்படை போலீசார் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.



இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது உள்ளே மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.



பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கின்ற சபரிகிரீசன் என்பவரை கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை கேரள மாநிலத்திற்குக் கடத்த முற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...