கோவை வடவள்ளி அருகே மது போதையில் தூங்கியபோது உடலில் தீப்பிடித்து மெக்கானிக் உயிரிழப்பு..!

50 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


கோவை: கோவை வடவள்ளி அருகே உடலில் தீப்பிடித்து மெக்கானிக் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (61) இவரது மனைவி விஜயகுமாரி (49). இவர்கள் கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மோகன்தாஸ் வடவள்ளி வீட்டிலும், விஜயகுமாரி பாலக்காட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். மோகன்தாஸுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்தாக தெரிகிறது.

இதனிடையே, நேற்று முன் தினம் மோகன்தாஸ் வழக்கம்போல் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது வீட்டில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி திடீரென கீழே விழுந்து மோகன்தாஸ் உடையில் தீப்பிடித்துள்ளது. மது போதையில் இருந்த அவர் தீயை அணைக்க முயன்றுள்ளார்.

ஆனால், உடல் முழுதும் தீப்பிடித்த நிலையில் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...