கோவையில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி - பணியின் போது உயர்மின் அழுத்த கம்பி மீது மோதியதால் ஏற்பட்ட சோகம்

17 வயது சிறுவன் ராமசெட்டிபாளையம் பள்ளி வீதியில் பணியில் இருந்த போது, இரும்பு கம்பியை தூக்கியதாக தெரிகிறது. அப்போது, மேலே சென்ற மின்கம்பிகள் மீது இரும்பு பட்டதும், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.


கோவை: கோவையில் பணியின் போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், 17 வயதான அவரது மூத்த மகன், கடந்த ஆறு மாதமாக கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் ராமசெட்டிபாளையம் பள்ளி வீதியில் பணியில் இருந்த போது, இரும்பு கம்பியை தூக்கியதாக தெரிகிறது. அப்போது, மேலே சென்ற மின்கம்பிகள் மீது இரும்பு பட்டதும், அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கருப்பையா பேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் பணியாற்ற வைத்த தனியார் நிறுவன உரிமையாளர், ஃபாஸில் ரஹ்மான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...