கத்தியைக் காட்டி மிரட்டி செவிலியர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் உட்பட நான்கரை பவுன் தங்க நகைகளை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பல் மருத்துவமனையில் புகுந்து செவிலியரிடம் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் சாலையில் மீனா எஸ்டேட் பகுதியில் ஜென்டில் டென்டல் கேர் என்ற பெயரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோபு என்பவரின் மனைவி ஆலிஸ் (46) என்பவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று காலை மருத்துவமனையை திறந்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென மருத்துவமனையில் மருத்துவர் அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி ஆலிஸ் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் உட்பட நான்கரை பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ஆலிஸ் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.