தமிழ்‌ நாட்டுப்புற கலைஞர்களை மேடை ஏற்றும்‌ ஈஷா! பல்வேறு மாநில மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌

நம்‌ தமிழ்‌ மண்ணில்‌ பிறந்த நாட்டுப்புறக் கலைகளுக்கு அங்கீகாரமும்‌ வாய்ப்பும்‌ அளிக்கும்‌ விதமாக 4 நாள்‌ கலை திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவை பல்வேறு மாநிலங்களிலிருந்து ஈஷாவிற்கு வருகை தரும்‌ ஏராளமான மக்கள்‌ கண்டு ரத்து வருகின்றனர்‌.


கோவை: மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின்‌ ஒரு பகுதியாக, மார்ச்‌ 5-ம்‌ தேதி முதல்‌ பல்வேறு விதமான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்‌ ஆதியோகி முன்பு நடைபெற்று வருகின்றன.

2-ம்‌ நாளான நேற்று (மார்ச்‌ 6) திருவிழா காலங்களில்‌ ராமாயணம்‌ மற்றும்‌ மகாபாரத கதைகளை நடனம்‌ மற்றும்‌ பாடல்கள்‌ மூலம்‌ சொல்லும்‌ கட்டைக்கூத்து நடைபெற்றது.



இதில்‌ புகழ்பெற்ற பெண்‌ கட்டைக்கூத்து கலைஞர்‌ திலகவதி ஸ்ரீ கிருஷ்ணா கட்டைக்கூத்து குழுவினர்‌ பங்கேற்று பஞ்ச பூதங்கள்‌ மற்றும்‌ சிவன்‌, பார்வதி கதைகளைக் கூத்து வடிவில்‌ வெளிப்படுத்தினர்‌.



சுமார்‌ இரண்டரை மணி நேரம்‌ நடந்த இந்த கலை நிகழ்ச்சியை பல்வேறு மாநில மக்கள்‌ கண்டு களித்தனர்‌. பெரும்பாலும்‌ ஆண்கள்‌ மட்டும்‌ நிகழ்த்தும்‌ கட்டைக்கூத்தை சிறப்பாக நிகழ்த்துவதும்‌, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதிலும்‌ திலகவது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.



மார்ச்‌ 5- ம்‌ தேது தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள்‌ சங்கத்தைச்‌ சேர்ந்த கலைஞர்களின்‌ கலை நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. இதில்‌ பிரபல கிராமிய இசை பாடகி ரீட்டா அந்தோணிதாசன்‌ நாட்டுப்புறப் பாடல்களை பாடி பார்வையாளர்களின்‌ கைத்தட்டல்களைப் பெற்றார்‌. அத்துடன்‌, அக்குழுவினர்‌ கரகாட்டமும்‌, காவம்‌ ஆட்டமும்‌ ஆம மக்களை மகிழ்வித்தனர்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்‌ தேவாரப் பாடல்களை பாடி மக்களை பக்தியில்‌ ஆழ்த்தினர்‌.

மார்ச்‌ 7-ம்‌ தேதி கஜஹஸ்தானில்‌ இருக்கும்‌ இந்திய பாரம்பரிய நடனம்‌ மற்றும்‌ யோகா மையத்தினரின்‌ நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும்‌, பரத நாட்டியமும்‌ நடைபெற உள்ளது. மார்ச்‌ 8-ம்‌ தேதி ஈஷாவை சுற்றியுள்ள மலைவாழ்‌ இராமங்களில்‌ வாழும்‌ இருளர்‌ பழங்கும மக்களின்‌ பாரம்பரிய இசை மற்றும்‌ நடன நிகழ்ச்சியும்‌ நடைபெற உள்ளது.

தினமும்‌ இரவு 7 மணிக்கு தொடங்கும்‌ இக்கலை நிகழ்ச்சிகள்‌ இரவு 10 மணி வரை நடைபெறும்‌. இடையில்‌ ஆதியோகி திவ்ய தரிசனமும்‌ நடைபெறும்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...