எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாக மனு அளித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேக்சினேட்டர்களாக பணிபிரியும் பணியாளர்கள் தங்களுக்கு மூன்று மாத சம்பளம் தரப்படவில்லை எனவும், வேலை அமர்வு செய்திட கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38 பேர் வேக்சினேட்டர்களாக பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டதாகவும், வேலை செய்ததில் 3 மாத சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் இது குறித்து சரியாக விளக்கம் அளிக்காமல் புறக்கணிப்பதாகப் புகார் அளித்தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் தங்களது சம்பளத்தைப் பெற்று தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர்கள், பணி அமர்வு செய்து உதவுமாறும் கேட்டுக்கொண்டனர்.