கோவையில் குடும்ப தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை - மனைவி காவல் நிலையத்தில் சரண்; மகன் கைது..!

குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை வெட்டி கொலை செய்த மனைவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50).

இந்நிலையில், நாராயணசாமியின் மூத்த மகன் ராஜ்குமார் மனைவிக்கு நீலிகோணாம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது நாராயணசாமி தனது பெண் நண்பர் ஒருவரையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ராஜேஷ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது மீண்டும் ராஜேஷ்வரி, ராஜ்குமார் ஆகியோர் நாராயணசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணசாமி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, ராஜ்குமார் இருவரும் வீட்டிலிருந்த கத்தியால் நாராயணசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தகவலை தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

குடும்ப சண்டையில் தொழிலாளியை மனைவி, மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...