மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மனநல காப்பகங்கள் மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் இம்மன்றம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மனநலம் மீளாய்வு அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் மன நல மன்றங்கள் அமைக்க கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில், திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் உள்ளடக்கிய மன நல மன்றம் அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜே. பி. ராஜ் நியமிக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த மனநல மீளாய்வு மன்றத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மனநல மீளாய்வு மன்றத்தின் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் கொடுமை குறித்து மனநல மீளாய்வு மன்றத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மனநல காப்பகங்கள் மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் இம்மன்றம் மூலம் கண்காணிக்கப்படுகிறது, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மனநல மீளாய்வு மன்ற தலைவர் ஜெயராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி, மேற்கு மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.