கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே மோதல்; மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி எஸ்.பி.வேலுமணி மனு..!

வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.



கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே ஏற்பட்ட மோதலால் மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுத் தாக்கல் செய்தார்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அப்பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.



இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8 பேருடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோரிடம் மனு அளித்தார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்:-



கோவையில் வெளியூர் நபர்களை வைத்து திமுகவினர் வன்முறை நடத்துகின்றனர் என தெரிவித்தார். முறைகேடான வகையில் அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள் எனவும் கூறினார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களை கத்தி, கம்புடன் வந்து தாக்கி இருக்கின்றனர் எனவும், காரை சேதப்படுத்தி இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தல் வன்முறைகள் கோவைக்கு புதுமையாக இருக்கின்றது என தெரிவித்தார்.

எனவே, வெள்ளலுர் பேரூராட்சி தேர்தலைத் தள்ளி வைத்து இருக்கின்றனர் எனவும், இது நியாயமே இல்லை எனவும் கூறிய அவர், வெள்ளலூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும் ஆட்சியர் முன்னிலையில் நிறுத்தி இருக்கின்றோம்.

அதிமுகவினரை தாக்கிவிட்டு திமுகவினர் காவல் துறையில் பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர். அடித்துவிட்டு அவர்களே பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...