கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்து..!

கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி பள்ளிக்கு கழிப்பிடம் கட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்திட்டார்.

மேயர் பதவிக்கு கடுமையான போட்டி இருந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சியில் 19வது வார்டில் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனாவிற்கு மேயர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா கடந்த 10 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார். மேலும், கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பகுதி பொறுப்புக் குழு நிர்வாகியாக உள்ளார். மூன்று தலைமுறை திமுக குடும்பம் என்பதாலும், கட்சி பணிகளில் தொடர்ந்து பங்கேற்றதால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.



கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றவுடன், கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி பள்ளியில், கழிப்பிடம் கட்டுவதற்கான முதல் அனுமதி ஒப்பந்தத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கையெழுத்திட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...